SRI LANKA RED CROSS SOCIETY KATTANKUDY DIVISION

www.slrcskkydivision.com

Our Activities

  1.  

    இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் டாக்டர் UL. நசிர்தீன் அவர்களை கௌரவிக்கும் வைபவம்

     

  2. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவின் தொண்டர்களுக்கான கொள்கை பரப்பு நிகழ்ச்சி நிரலும், முதியோர் இல்லத்தில் சிரமதான நிகழ்வும்

  3. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவினால் பாடசாலை மாணவிகளுக்கு நடாத்தப்பட்ட முதலுதவிப் பயிற்சி வகுப்பு

  4. இலங்கை செஞ்சிலுவச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவு வழங்கிய வெள்ள நிவாரண உதவி (இரண்டாம் கட்டம்)

  5. செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவால் கிணறுகளுக்கு தெளிப்பதற்காக குளோரின் பவுடர் வழங்கப்பட்டது

  6. வெள்ளத்தில் பாதிக்கபட்ட காத்தான்குடி மக்களுக்கு ஐ.சி.ஆர்.சி.யின் சுகாதார பொதிகள்

  7. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேர முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம்

  8. காத்தான்குடி பிரிவு அனர்த்த முன்னேற்பாடு தொடர்பான கூட்டம்

  9.  

    செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவால் கிணறுகளுக்கு தெளிப்பதற்காக குளோரின் பவுடர் வழங்கப்பட்டது

______________________________________________________________

சுனாமி மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றேபாது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லேவண்டிய பாதைகைள காட்டும் அறிவுறுத்தலடங்கிய

விளம்பர பலகைகள் அமைக்கும் நடவடிக்கைள் காத்தான்குடி பிரேதச செயலாளர் பிரிவின் புதிய காத்தான்குடியிலுள்ள அனர்த்தவலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கைரைய அண்மித்த மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால முன்னெச்ரிசக்கை வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் இவ்விளம்பர பலைககைள நாட்டும் நடவடிக்கை 05-08-2010 வியாழக்கிழமை இடம்பெற்றது.

புதிய காத்தான்குடி 167சி இலக்க கிராம உத்தியோகத்தர் அளஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால முன்னெச்சசக்கை வேலைத்திட்டத்தின் காத்தான்குடி இணைப்பாளர் இர்சாத் மற்றும் அனர்த்த முகாமைத்து கிராமிய மட்டக்குழுவின் உறுப்பினர்களும் இணைந்து இவ்விளம்பர பலைககைள நாட்டி வைத்தனர்.

புதிய காத்தான்குடியிலுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் 21 இவ்வாறான விளம்பர பலைககள் நாட்டப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுத்தலைவர் அப்துல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கைரைய அண்மித்த பகுதிகளில் இவ்விளம்பர பலைககைள நாட்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

_________________________________________________________________________________________
உலக சுற்றாடல் தினத்தையொட்டி இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி பிரிவால் புதிய காத்தான்குடி தோணாக்கால்வாய் சிரமதான மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இதன் சிரமதான வைபவம் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள தோணாக்கால்வாயடியில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் அப்துல்லா அதன் காத்தான்குடி பிரிவின் உப தலைவர் றாபி உள்ளிட்ட அதன் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு இதை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் அனர்த்த நேரகால முன்னெச்சரிக்கைத்திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் இர்சாத்தின் மேற்பார்வையில் இது நடை பெற்றது.

மழை காலத்தில் புதிய காத்தான்குடி தோணாக்கால்வாய் வெள்ளம் வடிந்தோடுவதற்கான மிக முக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


___________________________________________________________________________________________
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவினால் வறிய முதியவர்களுக்கு உடு துணிகள் வழங்கும் வைபவம் 3.10.2010 புதிய காத்தான்குடி அஷ்ஷஹ்றா ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் தின மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் தி.வசந்தராசா மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் கோமலேஸ்வரன் உட்பட அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் மற்றும் முதியோர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 100 வறிய முதியவர்களுக்கு உடுதுணிகள் வழங்கப்பட்டதுடன் மூன்று பாடசாலைகளுக்கும் மூன்று பாலர் பாடசாலைகளுக்கும் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பைகளும் இதில் வழங்கப்பட்டன.


__________________________________________________________________________________________
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை வேலை திட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்துக்கான அனர்த்த முகாமைத்துவக் குழு மாதார்ந்தக் கூட்டம் 29.9.2010 காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் தர்மேந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் பென்ஞமின், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் முதலுதவி உப கரணங்களும் வழங்கப்பட்டன.

__________________________________________________________________________________________

  • During tsunami tome the kattankudy divisional hospital was fully destroyed. On July 14th 2010 with help Norwegian Red Cross Society we built and already in operation and been handed over to be manage by government

  • Parallel to the National Dengue prevention program branch volunteers visited hose by house educating the community. The volunteers also helped householders to clean their houses and the surrounding areas. Branch mobilized their volunteers in Manmunai North, Kattankudy & Manmunai South & Eruvil Pattu DS Divisions, identified as the areas severely affected. This program was initiated on 26 and continues with funding support of Italian RC.  (Date : 26-06-2009)

  • 3 day Basic First Aid Training program started on 21st was conducted for the Early Warning Project volunteers attached to the Kattankudy Division (21-3-2009)

  • On 29th of this month branch donated 250 packs of Non food related items for the use of IDPs thorough the SLRCS divisional office in Kattankudy. (29-01-2009)

  •        Flood response- Due to the week long torrential rain, flood prone areas affected. Branch responded to the affected in terms of NFRI distribution with the assistance from NHQ and British Red Cross Society and cooked food provision with the assistance from German Red Cross Society. Responses were taking place during 21st to 26th of of this month mostly in Eravur Pattu and Kattankudy DS divisions. (21-12-2007 to 26-12-2007)

 

Leave a comment

Pages

Front Page How to help Our News Vision and Mission Our Activities Volunteers programmers blood donation Emblem Contact us

E-mail us